கோவில் விவரம்

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில், திருநகர் காலனி, ஈரோடு

1960ல் ஈரோட்டில் புதிதாகத் தோன்றிய குடியிருப்பாகிய திருநகரில் ஓர் ஆலையம் வேண்டும் என்ற எண்ணம் சிவத்திரு E.M.பாலசுப்ரமண்யம் அவர்கள் உள்ளத்தில் முகிழ்த்தது. இன்று கவினுற விளங்கும் கற்பக விநாயகர் கோயில் வளாகம் அன்று அவருடையதாக இருந்தது. இறைவன் மீது அயரா அன்பு உந்தியதால், கி.பி. 1964-ல் தனக்கு சொந்தமாயிருந்த நிலத்தைக் கோயில் கட்டுவதற்காகத் தானமாக கொடுத்தார் சிவத்திரு E.M.பாலசுப்ரமண்யம். இவர்களுடன் சிவத்திரு S.பாலகிருஷ்ணன் அவர்களும் சேர்ந்து அவ்விடத்தில் அருள்மிகு கற்பக விநாயகருக்குத் திருக்கோயில் எழுப்பி, அன்பர்கள் பலர் துணையுடன் கி.பி. 1970-ல் திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்த்திச் சிவபுண்ணியம் செய்தனர். சிவத்திரு E.M.பாலசுப்ரமண்யம் அவர்கள் 2/11/1979 அன்று இறைவனடி சேர்ந்தார். சிவநேயர் செல்வர் திரு E.M. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் ஏற்றி வைத்த கற்பக விநாயகர் ஆலயம் என்னும் மகா தீபத்தை அவரின் வழி நின்று, அடுத்து தலைமுறையினரிடம் அளித்தவர், அவரது மனைவியார் திருமதி அருக்காணி அம்மையார் அவர்கள். 

அவர் கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் நாள் வழிபாட்டிலும், கிருத்திகை, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளிலும் தவறாமல் பங்கு பெற்று, முன் நின்று நடத்துவார். திருமதி அருக்காணி அம்மையார் அவர்கள் 3/11/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

1970ல் முதல் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2006ல் இரண்டாம் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நிகழ்த்தப்பட்டது. பின்னர் 2026ல் மூன்றாம் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நிகழ்த்தப்பட்டது.

இக்கோவிலில் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ தையல்நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தீஸ்வர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ உற்சவர் சன்னதிகள் எழுந்தருளியுள்ளன.

இக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம், ஸ்தல விருட்சம், நந்தவனம், விழா மண்டபம் மற்றும் சப்பரம் தேர் அமைந்திருக்கிறது.

1
நடை திறக்கும் நேரம்

காலை 07.00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

about

புகைப்படத் தொகுப்பு